;
Athirady Tamil News

இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.!! (படங்கள்)

0

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் இன்று( வெள்ளிக்கிழமை) காலை எட்டு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.

இரணைமடுகுளத்தின் நீரேந்த பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் இரண்ட வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளமான 36 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

எனவே இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + ten =

*