நீர் கட்டணத் திருத்தம் வேண்டும்!!

தற்போதைய நிலையில் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும், எனினும் கடந்த 06 வருடமாக நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாதம் 15 யுனிட்டுக்கும் குறைந்த பாவனையை கொண்டவர்களுக்கு இந்த திருத்தம் பொருந்தாது எனவும் அதனை விட அதிகமாக நீரினை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு நீர் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார மேலும் தெரிவித்தார்.