;
Athirady Tamil News

ஈரான்: திருமண விழாவில் எரிவாயு கசிந்து தீ விபத்து – 11 பேர் பலி..!!

0

ஈரான் நாட்டின் மேற்கு பகுதியின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சக்கெஸ் நகரில் நேற்று நடந்த திருமண விழாவில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து நிகழ்விடம் பற்றி எரிந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

‘இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 34 நபர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 9 =

*