;
Athirady Tamil News

மருதமுனை ஹியுமன் லிங்க் நிறுவகத்தினால் கலை நிகழ்வுகள்..!! (படங்கள்)

0

சர்வதேச விஷேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு மருதமுனை ஹியுமன் லிங்க் நிறுவகத்தினால் விஷேட தேவையுடையோருக்கான கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மருதமுனை விஷேட தேவையுடையோருக்கான வளப்படுத்தல் மத்திய நிலையத்தினால் மருதமுனை மதீனா வித்தியாலயத்தில், ஹியுமன் லிங்க் நிறுவனத்தின் அதிபர் ஏ.கமறுதீன் தலைமையில் சனிக்கிழமை இன்று (07) நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என். மதிவண்ணன், கட்டிட வடிவமைப்பு பொறியியலாளரும் ஹியுமன் லிங்க் போசகருமான பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.நியாஸ் ஏ. சமட், இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மெளலவி எம்.எஸ்.எம்.தாஸிம், கல்முனை கட்டிட திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரும் ஹியுமன் லிங்க் நிறுவனத்தின் ஆலோசகருமான ஏ.எம்.ஷஹிர், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.எம்,அலியார், சமூக சேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் எம்.பி.ஷம்சுதீன், மாணவர்களது பெற்றோர்கள் , நலன்விரும்பிகள், குறித்த நிறுவனத்தின் நிருவாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய ஹியுமன் லிங்க் நிறுவனத்தின் அதிபர் ஏ.கமறுதீன் விஷேட தேவையுடைய மாணவர்களும் சமூகத்தில் சம அந்தஸ்து உடையவர்கள், இவர்களது எதிர்காலம் குறித்தும், தேவைகள் குறித்தும் நாங்கள் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் தங்களது பாடசாலையின் அடைவுகள் குறித்தும் குறிப்பிட்டார். மேலும் குறித்த பாடசாலைக்கு தேவைகள் பல இருப்பதாகவும் இதற்கான உதவிகளை சமூக சேவைகள் திணைக்களம் வழங்கி உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ஹியுமன் லிங்க் நிறுவனத்தின் ஆசிரியர்கள் கெளரவப்படுத்தப்பட்டதுடன், விஷேட தேவையுடைய மாணவர்களின் நாடகங்கள், பாடல்களுக்கான அபிநயங்கள், வினோத உடை போட்டி என்பனவும் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − three =

*