;
Athirady Tamil News

அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு தீர்வு!! (படங்கள்)

0

வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின்
பிரச்சினைக்கு சுமூக தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை
வவுனியா அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர் மத்தியில் நீண்ட காலமாக தொடர்ந்த வருகின்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வவுனியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு(06.12.2019) விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை அவதானித்தார்.

அத்துடன், வவுனியா தனியார் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச பேருந்து ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் எதிர்கொள்கின்ற நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் கேட்டு அறிந்த கொண்டார்.
இதன்போது, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதையடுத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கிடையிலான நேர அட்டவணையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு தரப்பினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தனியார் போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகள், இதனால் மக்கள பல்வேறு அளெகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் சுட்டிக்
காட்டினர்.

அனைத்து தரப்பினதும் கருத்துக்களை அவதானித்த அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள். அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் பிரச்சிரனைகளை அணுகினால் அனைத்தையும் சுமூகமாக தீர்க்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார். மேலும் எதிர்வரும் திங்கட் கிழமை இதுதொடர்பான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறு
வவுனியா அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டார்.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய குறித்த விஜயத்தில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன், அதிகாரிகள் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*