;
Athirady Tamil News

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது!!

0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான அங்கொட லொக்காவின் உதவியாளர் இருவர் கேரள கஞ்சாவுடன் முல்லேரியாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 02 கிலோ கிராம் கேரள கஞ்சா அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நீண்ட காலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் முல்லேரியாவ பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*