;
Athirady Tamil News

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் தப்பித்து ஓடிய மணமகன்! பின்னர் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ..!!

0

இந்தியாவில் மருத்துவமனையில் வைத்து இளம்பெண்ணுக்கு தாலி கட்டி திருமணம் செய்த இளைஞர் சிறிது நேரத்தில் தப்பித்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவை சேர்ந்த இளம்பெண்ணும், இளைஞரும் காதலித்து வந்தனர்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் இளம்பெண் கேட்ட நிலையில் நீ தாழ்ந்த சாதியை சேர்ந்தவள் என்பதால் என்னால் உன்னை மணக்க முடியாது என கூறினார்.

இதையடுத்து மனமுடைந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பயந்து போன காதலன் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு இளம்பெண்ணுக்கும், காதலனுக்கும் கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஆனால் காதலிக்கு தாலிக்கட்டிய சில நிமிடங்களில் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

இதையடுத்து கணவர் மீது இளம்பெண் பொலிசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் அதிர்ச்சியான விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார், என்னை காதலிப்பதாக கூறி வற்புறுத்தி அவர் பலாத்காரம் செய்தார், பின்னர் சாதியை காரணம் காட்டி என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

அவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து குறித்த இளைஞரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + one =

*