;
Athirady Tamil News

மாதவிடாய் என்பதற்காக தனி குடிசைக்குள் அடைக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு: முதல் முறையாக பொலிசார் நடவடிக்கை..!!

0

நாகரீகம் உச்சத்தைத் தொட்டுள்ள இந்த காலகட்டத்திலும், மாதவிடாய் நாட்களில் பெண்களை தனிமைப்படுத்தி, தனிமைக் குடிசைக்குள் அடைத்து வைக்கும் சோகம் சில நாடுகளில் தொடரத்தான் செய்கிறது.

அப்படி நேபாளத்தில் குடிசை ஒன்றிற்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் ஒருவர் சென்ற ஞாயிறன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த பரிதாப சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனியாவது இந்த கொடுமைக்கு ஒரு முடிவு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பார்வதி புதா ராவத் (21) என்ற இளம்பெண், தான் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிசைக்குள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் குளிரை போக்குவதற்காக நெருப்பு பற்றவைத்திருந்த நிலையில், அந்த புகையில் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி தனி குடிசைக்குள் தங்க வற்புறுத்திய அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தைப் பொருத்தவரையில், பெண்ணை தாய் என்னும் புனிதத்தன்மைக்கு உயர்த்தும் மாதவிடாயையும், பிள்ளை பெற்றெடுத்த பெண்ணையும், இந்துக்கள் இன்னமும் அருவருப்பான விடயமாகத்தான் பார்க்கிறார்கள்.

சாவ்ப்பாடி என்ற பெயரில் மாதவிடாயை தீட்டு என்கிறார்கள் அவர்கள்.

எனவே மாதவிடாய் வந்த பெண்ணை வீட்டுக்குள் அனுமதிப்பதையும், உணவு, விளக்குகள் போன்ற மத சம்பந்தமான விடயங்கள், கால்நடைகள் மற்றும் மனிதர்களை தொடுவதையும் அவர்கள் தீட்டு என கருதுவதால், தனி குடிசை ஒன்றிற்குள் அடைத்து வைக்கிறார்கள்.

அப்படி அடைத்து வைக்கப்படும் பெண்கள், குளிர், புகையால் மூச்சுத்திணறல், பாம்புக்கடி மற்றும் காட்டு விலங்குகள் தாக்குதல் ஆகியவற்றால் பலியாவதும் உண்டு.

இந்த ஆண்டில் மட்டும் அப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பார்வதியை சேர்த்து மூன்றாகிறது.

ஆனால் இத்தகைய மரணங்கள் பொதுவாக பொலிசாருக்கு தெரிவிக்கப்படாமல் விட்டுவிடப்படுவதால் வெளி உலகுக்கு தெரியாமலே போய்விடுகின்றன. இந்நிலையில், நேபாள வரலாற்றில் முதன்முறையாக மாதவிடாய் மரணம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பார்வதியை தனிக்குடிசைக்குள் அடைத்து, அவரது மரணத்துக்கு காரணமாக இருந்ததாக, அவரது உறவினர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

பொலிசார் சாவ்ப்பாடி மரணம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது ஒரு நல்ல விடயம், இது இனி இத்தகைய செயலை செய்வதற்கு மற்றவர்களை யோசிக்க வைக்கும் என்று கூறும் சாவ்ப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலரான ராதா பவ்தல், என்றாலும் இப்பழக்கம் முற்றிலும் முடிவுக்கு வர காலம் செல்லும் என்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 12 =

*