;
Athirady Tamil News

அமெரிக்கா கடற்படை தளத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 6 சவுதி பிரஜைகள் கைது: வெளியான திடுக்கிடும் தகவல் ..!!

0

அமெரிக்கா கடற்படை விமான நிலையத் தளத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு தொடர்பில் சவுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

புளோரிடாவின் பென்சாக்கோலாவில் உள்ள கடற்படை விமான தளத்தில் பயிற்சி பெற்று வந்த ராயல் சவுதி விமானப்படை 2வது லெப்டினன்ட் முகமது சயீத் அல்சாம்ரானி, வெள்ளிக்கிழமை காலை வகுப்பறைக்குள் கைத்துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினார், இதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தாக்குதலில் ஈடுபட்ட அல்சாம்ரானியை சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், தாக்குதல் நடந்த தளத்திற்கு அருகே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 6 பேரும் சவுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

6 பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மூன்று பேர் முழு சம்பவத்தையும் படமாக்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அல்சாம்ரானி அல்லது கடற்படை தளத்துடன் ஆறு பேருக்கு என்ன தொடர்பு இருந்தது என்பது தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − three =

*