;
Athirady Tamil News

கிண்ணியாவில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி – இருவரை காணவில்லை!!

0

கிண்ணியா கடற் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

இன்று காலை 05 பேருடன் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கு உள்ளானவர்களில் இருவர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போயுள்ள மற்றைய இருவரையும் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 4 =

*