;
Athirady Tamil News

கட்சிக்குள் பிளவின்றி புதிய தலைமைத்துவத்தை தெரிவு செய்வோம் – அஜித் பி பெரேரா!!

0

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியமாகின்றது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விடயமாகும்.

ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் போன்றவற்றை கட்சி பிளவுபடாமல் எவ்வித முரண்பாடுகளும் இன்றி தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் தினங்களில் புதிய தமைத்துவமும் தெரிவு செய்யப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவைப்படுவதாக அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவிக்கும் அதே வேளை, இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கும் போதே அஜித் பி பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கும் விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டு கட்சி பிளவடையும் என்று பலரும் கூறினார்கள்.

எனினும் புதிய ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச அனைவரதும் இணக்கத்துடன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அதே போன்று எதிர்க்கட்சி தலைவர் யார் என்று தெரிவு செய்யும் போதும் இதே போன்று கட்சி பிளவுபடும் என்று சிலர் எதிர்பார்த்தனர்.

எனினும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. எவ்வித பிரச்சினையும் இன்றி சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியமாகிறது என்பதை யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள்.

அந்த புதிய தலைவர் யார் என்பதை எதிர்வரும் ஓரிரு தினங்களில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவொன்றை எடுப்போம்.

ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்கின்றோம். அரசியலில் இவ்வாறான தோல்விகள் ஏற்படுகின்ற போதிலும் அந்த தோல்வி தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே புதிய தலைமைத்துவத்துடன் முன்னோக்கிச் செல்வோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + three =

*