;
Athirady Tamil News

28 நாள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்..!!

0

இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் இந்தி உள்பட 36 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டும் மொழிகளிலும் சுமார் 30 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.

பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் பெற்ற இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தனது 90-வது பிறந்தநாளை லதா கொண்டாடினார்.

இந்நிலையில், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப்பை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர். பின்னர், அவரது உடல்நிலை சற்று தேறியது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த லதா மங்கேஷ்கர் இன்று ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பினார்.

இளம்வயது பாடகிகளாக ஆஷா போஸ்லே – லதா மங்கேஷ்கர்

28 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய மகிழ்ச்சியை தனது டுவிட்டர் அபிமானிகளுடன் பகிர்ந்துக்கொண்ட லதா மங்கேஷ்கர், நான் நலம்பெற அருளிய தெய்வங்களுக்கும் பிரார்த்தித்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது உடல்நலம் தேறுவதற்கு இரவு-பகல் பாராது காவல் தேவதைகளாக இருந்து கண்காணித்து, சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கரின் தங்கையான பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே(83) சுமார் 12 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*