;
Athirady Tamil News

இலங்கை வந்த பிரபல முதலீட்டாளர்!!

0

உலகளவில் வளர்ந்து வரும் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என கருதப்படும் டொக்டர் மாக் மோபியஸ் இன்று (09) காலை இலங்கை வந்தடைந்தார்.

டொக்டர் மாக் மோபியஸ் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாடு ஒன்று எதிர்வரும் நாளை (10) இடம்பெறவுள்ளது.

கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்படும் பாரிய கலப்பு அபிவிருத்தி திட்டமான Cinnamon Life இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொக்டர் மொபியஸ் 30 வருடத்திற்கும் அதிக காலமாக Franklin Templeton Investments இல் பணியாற்றிய நிலையில், டெம்பல்டன் வளர்ந்து வரும் சந்தைக் குழுமத்தின் தவிசாளராகவும் செயற்பட்டார்.

அவரின் சேவைக் காலத்தினுள் குழுமத்தின் மேலாண்மை சொத்துக்களை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவுப்படுத்திய நிலையில், ஆசியா, லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவை கேந்திரமாக கொண்டு வளர்ந்து வரும் சந்தை மற்றும் தேச எல்லை நிதியங்களை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*