;
Athirady Tamil News

புறப்பட்ட தயாரான நேரத்தில் வந்த சோக செய்தி: அவசரமாக திருப்பப்பட்ட விமானம் ..!!

0

விமானத்தில் இருந்த ஒரு வயதான தம்பதிக்கு, உறவினர் இறந்துவிட்டதாக சோக செய்தி வந்ததை அடுத்து அவசரமாக விமானம் திரும்பியுள்ளது.

சீனாவில் ஹைனான் ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை ஹாங்க்சோவிலிருந்து சான்யாவுக்கு ஓடுதளத்தில் புறப்பட்டுள்ளது.

அப்போது வயது முதிர்ந்த ஒரு தம்பதியினரின் நெருங்கிய உறவினர் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்துள்ளது. இதனால் தம்பதியினர் இருவரும் பெரும் கலக்கமடைந்து, விமானத்தை மீண்டும் திரும்புமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

அங்கிருந்த பணிப்பெண், வயதான தம்பதியினரை சமாதானம் செய்ததோடு, விமான ஓட்டிக்கும் தகவல் கொடுத்தார்.

உடனடியாக விமானம் புறப்படும் வாயிலுக்குத் திரும்பியது. அங்கு வயதான தம்பதியினர் இறங்கி மற்ற பயண ஏற்பாடுகளைச் செய்தனர். 50 நிமிட தாமதத்திற்குப் பிறகு மீண்டும் விமானம் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 13 =

*