;
Athirady Tamil News

காதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..!!

0

பிரித்தானியாவில் காதலி கைவிட்டதால் மனமுடைந்த காதலன், காதலியின் கண் முன்பே தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

ஆறு வாரங்களுக்கு முன் Morgan Baskett (42)ஐ அவரது காதலி Michelle Howarth பிரிந்துள்ளார்.

ஆனால், Morganக்கு காதலியைப் பிரிய மனமில்லை! நேற்று லண்டனிலுள்ள உணவகம் ஒன்றிற்கு வந்த Morgan, அங்கிருந்த Michelleஇன் காரை வழி மறித்திருக்கிறார்.

இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் நிகழ, சட்டென ஒரு பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டிருக்கிறார் Morgan.

பெட்ரோல் கீழே சிந்தியதில் இருவரும் வழுக்கி விழ, அருகிலிருந்த உணவகத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் வந்து, Michelleஐ அங்கிருந்து தூரமாக இழுத்துச் சென்றிருக்கிறார்.

அதற்குள் சுதாரித்து எழுந்துகொண்ட Morgan தன் மீது தீ வைத்துக்கொள்ள, பயங்கரமாக எரிந்திருக்கிறது தீ.

நடப்பதைக் கண்ட அந்த உணவக உரிமையாளர், உணவகத்திற்குள் சென்று தீயணைக்கும் கருவியை எடுத்து வந்து தீயை அணைத்திருக்கிறார்.

பற்றி எரியும் தீயுடன், கைகளை அகல விரித்தபடி நின்றுகொண்டே இருந்த Morgan, நான் சாக விரும்புகிறேன், என்னை சாக விடுங்கள் என்று கூறியபடியே நின்றிருக்கிறார்.

அதற்குள் அக்கம் பக்கத்திலுள்ள விடுதி ஊழியர்களும் வர, பொலிசார் அழைக்கப்பட, ஆம்புலன்ஸ் வந்து அங்கேயே Morganக்கு முதலுதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

பின்னர் லண்டனிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது நிலைமை அபாய கட்டத்திலேயே இருப்பதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*