;
Athirady Tamil News

புட்டிப்பால் குடிக்க மறுத்த குழந்தை: தாய் செய்த நெகிழ்ச்சி செயல்..!!

0

தாய்மையே ஒரு தியாகம் என்னும்போது, தன் தாய்ப்பாலையும் தானம் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளார் ஒரு அமெரிக்கப்பெண்.

விர்ஜினியாவைச் சேர்ந்த ஜினா மிட்ச்செல் (36), தான் வீட்டில் இல்லாதபோது குழந்தைக்கு பசித்தால் கொடுப்பதற்காக அவ்வப்போது தாய்ப்பாலை சேகரித்து பிரீஸரில் சேமித்து வந்துள்ளார்.

ஆனால் ஜினாவின் குழந்தை பாட்டிலில் அடைக்கப்பட்ட பாலைக் குடிக்க மறுத்துவிட்டது.

சுமார் 10 லிற்றர் பால் இருக்கிறதே, வீணாய்ப்போகக்கூடாதே என்று எண்ணிய ஜினா, பேஸ்புக்கில் உள்ளூர் குழுக்களிடம் விடயத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். எதிர்பார்த்ததை விட விரைவாக பதில் வந்துள்ளது.

பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்றை தத்தெடுத்து, போதுமான பால் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த ஒரு பெண், தன் குழந்தைக்கு அந்த பாலைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பிறகு ஜினாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. இப்போது தன் குழந்தைக்கு பாலூட்டும்போதெல்லாம், ஒரு பக்கம் அவளுக்கு பாலூட்டிக்கொண்டே மறுபக்கம் ஒரு பாட்டிலில் பாலை சேகரிக்கிறார் ஜினா.

இதுவரை 20 லிற்றர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளாராம் ஜினா. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விடயமும் உள்ளது.

ஜினா குழந்தையாக இருக்கும்போது, அவரது தாயான Bonnie Dinatro (73)ம் தாய்ப்பால் தானம் செய்தவர் என்பதுதான் அது.

Bonnie யாருக்கெல்லாம் தாய்ப்பால் தானம் செய்தாரோ, அவர்களிடமிருந்து இன்றும் அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*