;
Athirady Tamil News

சரமாரி தாக்குதல்.. நாட்டையே கதிகலங்க வைத்த மர்ம நபர்: பொலிசிடம் சிக்கிய போது எடுத்த விபரீத முடிவு..!!

0

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் உள்ள மருத்துவமனைக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பிராந்தியம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருப நகரத்தில் உள்ள ஆஸ்ட்ராவ மருத்துவமனையிலே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று டிசம்பர் 10ம் திகதி காலை துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டு தப்பிச்சென்றுள்ளான்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் உட்பட அனைவரையும் வெளியேற்றியுள்ளனர். இத்தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தப்பியோடிய தாக்குதல்தாரியின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார், மருத்துவமனையில் இருந்து சில்வர்-சாம்பல் நிற காரில் குற்றவாளி தப்பிச்சென்றதாக தெரிவித்தனர்.

மேலும், குற்றவாளி ஆபத்தானவர், அநேகமாக ஆயுதம் ஏந்தியவர், தயவுசெய்து அவரைத் தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டாம், கண்டால் உடனடியாக பொலிஸை தொடர்பு கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காரை கண்டறிந்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆனால், காவல்துறையினர் தாக்குவதற்கு முன், மர்ம நபர் தலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தற்போது, மர்ம நபரை அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 8 =

*