;
Athirady Tamil News

பிரான்ஸ் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்..!!

0

பிரான்சில் நடைபெறும் வேலை நிறுத்தத்தால், சம்பந்தமே இல்லாத பிரித்தானியர்களும் பிரச்னைக்கு ஆளாகியுள்ளார்கள்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டங்களை எதிர்த்து பிரான்சில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத பிரித்தானியர்கள் பலரும் அல்லல்களுக்காளாகியுள்ளார்கள்.

டிசம்பர் 9 முதற்கொண்டு 12 வரை ரயில்வே சேவை கடுமையாக பாதிக்கப்படும் பிரான்ஸ் ரயில்வே அமைப்பான Eurostar தெரிவித்துள்ளது.

பாரீஸுக்கும் லண்டனுக்கும் இடையில் இயங்கும் ஏராளம் ரயில்கள் நேற்று காலை முதலே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இரண்டு தலைநகரங்களுக்கும் இடையில், குறைந்த அளவு ரயில் சேவையையே இயக்கப்போவதாக Eurostar எச்சரித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சிலுள்ள வர்த்தக யூனியன்கள் நாடு முழுவதும் டிசம்பர் 5 முதல் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதனால் இடையூறுகள் ஏற்படும் என்பதால், வழக்கமான கால அட்டவணையை பின்பற்ற முடியாத ஒரு சூழல் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, டிசம்பர் 12 வரை குறைவான ரயில்களையே இயக்க இருக்கிறோம். ஏற்கனவே 50,000கும் அதிகமான பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பால் மேலும் 30,000 பயணிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.

இதற்கிடையில், ரயில் சேவை பாதிப்பு போதாதென்று, ஏர் பிரான்ஸ் விமான சேவையும் வேலை நிறுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*