;
Athirady Tamil News

கோண்டாவிலில் ரயிலுடன் மோதுண்டவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!!

0

கோண்டாவிலில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் நபர் ஒருவர் கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தார்.

விபத்துக்குள்ளானவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

உயிரிழந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர். எனினும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கபெறவில்லை என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 18 =

*