;
Athirady Tamil News

கனடாவில் மனைவியை அடித்து கொன்ற வெளிநாட்டவர்: சீக்கிரம் ஜாமீனில் வர அபூர்வ சட்டப்பிரிவின் கீழ் விண்ணப்பம்..!!

0

கனடாவில் மனைவியை அடித்துக் கொன்ற பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர், அபூர்வமாக பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு ஒன்றின் கீழ் சீக்கிரம் ஜாமீனில் வர விண்ணப்பித்துள்ளார்.

கனடாவின் New Brunswickஇல் வாழ்ந்து வந்த Abdul Bari(52) என்பவர் தனது மனைவியாகிய Shaila Akther (26)ஐ கொலை செய்தார்.

25 ஆண்டுகளுக்கு ஜாமீன் கிடையாது என்ற நிபந்தனையுடன் கூடிய ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் Abdul, தற்போது முன்கூட்டியே ஜாமீனில் வருவதற்காக, அபூர்வமாக பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு ஒன்றை பயன்படுத்தி ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார்.

வெகு நாட்களாக Shailaவை சித்திரவதை செய்து வந்த Abdul, 2003ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 22ஆம் திகதி, அவரை தலையிலும் மார்பிலும் தாக்கி, தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தார்.

2004ஆம் ஆண்டு, Shailaவை கொலை செய்ததாக Abdul மீது குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் அவர்.

இந்நிலையில், ’faint hope clause’என்னும் அபூர்வமாக பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவின் கீழ் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார் Abdul.

இது அரசியல் சாசனத்துக்கே சவால் விடும் ஒரு நீண்ட நடைமுறையாகும். அதற்காக தனியாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டியிருக்கும். வழக்கமாக கனடா குற்றவியல் சட்டப்படி, கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகளுக்கு ஜாமீன் கிடையாது.

ஆனால், இம்முறை Abdul, ’faint hope clause’என்னும் முறையை பயன்படுத்தி ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ள விடயம் உற்று கவனிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − two =

*