;
Athirady Tamil News

பள்ளி வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம நபர்கள்: பதறிப்போன மாணவர்கள்..!!

0

போலந்து நாட்டில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் திடீரென மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் புகுந்த விவகாரம் தொடர்பாக தலைமையாசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போலந்து நாட்டின் Barczewo பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நவம்பர் 14 ஆம் திகதி அன்று, மர்ம நபர்கள் சிலர் முகமூடி அணிந்துகொண்டு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென உள்ளே புகுந்துள்ளனர்.

வெளியில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதால், பதறிப்போன ஒரு மாணவர் ஜன்னல் வழியாக மாடியிலிருந்து குதித்துள்ளார். மற்ற மாணவர்கள் வேகமாக உயிர்பயத்தில் தரையில் படுத்துள்ளனர்.

ஆனால் சில நிமிடங்கள் கழித்தே, தலைமையாசிரியரால் அது திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது எனவும், தோட்டா சத்தத்திற்காக வெளியில் பட்டாசு வெடித்திருப்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் மாணவர்கள் பலரும் பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை கேட்டு கொந்தளித்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தலைமையாசிரியரை பணிநீக்கம் செய்து நகர மேயர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + fifteen =

*