;
Athirady Tamil News

தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் எரிமலை வெடிப்பு: மகனின் குரலை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்..!!

0

தேனிலவை கொண்டாடுவதற்காக நியூசிலாந்தின் வெள்ளை தீவிற்கு சென்ற புதுமணத்தம்பதியினர் பயங்கர தீ விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

நியூசிலாந்தின் வெள்ளை தீவில் அமைந்துள்ள எரிமலையானது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக திடீரென வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தின் போது அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஏராளமான பயணிகள், கடும் புகைமூட்டத்திற்கு மத்தியில் சிக்கித்தவித்தனர்.

இதில் தற்போதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 34 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் மாயமாகியிருப்பதால் உயிர்பலி அதிகரிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த மத்தேயு யுரே (36) மற்றும் அவருடைய மனைவி லாரன் (32) ஆகியோர் பயங்கர தீக்காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 8ம் திகதியன்று திருமணம் நடைபெற்றுள்ளது. தங்களுடைய தேனிலவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக இருவரும், வெள்ளை தீவிற்கு சென்று சுற்றி பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தான் திடீரென எரிமலை வெடித்து சிதறியதாக மத்தேயு தன்னுடைய தாய்க்கு ஒரு குரல் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், “ஹாய், அம்மா, இது நான்தான். இது ஒரு நகைச்சுவை அல்ல என்பதை நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் தீவில் இருந்தபோது எரிமலை திடீரென வெடித்தது. அதில் லாரனும் நானும் மிகவும் மோசமான தீக்காயங்களுக்கு உள்ளானோம்.

இப்போது நாங்கள் நியூசிலாந்தில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறோம். இதனை உங்களுக்குத் தெரியப்படுத்த நான் விரும்புகிறேன்.

என் கைகள் எரிந்துவிட்டன, அதனால் என்னால் எனது தொலைபேசியைப் பயன்படுத்த முடியாது. நான் எவ்வளவு காலம் இங்கு இருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் முடிந்தவரை முயற்சி செய்து நல்ல செய்தியை விரைவில் உங்களுக்கு கூறுகிறேன் என கூறப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*