;
Athirady Tamil News

என் உயிருக்கு ஆபத்து: பிரித்தானிய இளவரசர் மீது புகார் கூறிய இளம்பெண் பரபரப்பு தகவல்..!!

0

எனக்கு தற்கொலை எண்ணம் இல்லை, என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் கூறியுள்ளதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனீடம் பாலியல் அடிமையாக இருந்த விர்ஜினியா ராபர்ட்ஸ் (36) என்னும் இளம்பெண் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோசமானவர்கள் தன்னை அமைதியாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள விர்ஜினியா, தான் இறந்துபோனால் அது தற்கொலை அல்ல என்றும் தனக்கு தற்கொலை எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ தன்னை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியது பிரித்தானிய ராஜ குடும்பம் வரை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஏராளம் இளம்பெண்களை துஷ்பிரயோகம் செய்து, பலருக்கு விருந்தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவர் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவிக்க, மற்றவர்களோ அது தற்கொலை அல்ல கொலை என்று சந்தேகம் எழுப்பினர்.

அதேபோல் தனக்கும் நேரிடலம் என அஞ்சும் விர்ஜினியா, அப்படி தான் இறந்துவிட்டால் அதை அப்படியே விட்டு விட வேண்டாம் என்றும், தன் குடும்பத்தை பாதுகாக்குமாறும் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 3 =

*