;
Athirady Tamil News

கட்சி வெற்றிப்பெற வேண்டுமானால் தலைவர் தலைமைத்துவத்தில் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்!!

0

அரசியல் கட்சி ஒன்று வெற்றிப்பெற வேண்டுமானால் அந்த கட்சியின் தலைவர் தலைமைத்துவத்தில் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

கட்சியின் தலைமைத்துவம் என்பது வேறுப்பட்ட விடயதானம் எனவும், கட்சி பலவீனமடைந்துவிட்டால் அதன் எதிர்விளைவுகளை நாட்டுக்கு எதிர்க்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி : ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுபவம் உள்ளது. ஆனால் சஜித் பிரேமதாசவிற்கு அனுபவம் குறைவு என்பதையா நீங்கள் கூற விளைகின்றீர்கள்?

பதில்: சஜித் விடயத்தை ஒரு புறம் வைக்கவும். எமக்கு 30 அல்லது 35 வருட அரசியல் அனுபவம் கிடைத்தாலும். கட்சியின் தலைமைத்துவம் என்பது பாராம்பரியமிக்கது. எனவே அதனை பாதுகாப்பதென்பது இலகுவானதல்ல.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 6 =

*