;
Athirady Tamil News

மக்களுக்கு கருணைக்கரம் நீட்டிய தமிழ்விருட்சம்!! (படங்கள்)

0

வன்னியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணைக்கரம் நீட்டிய தமிழ்விருட்சம்

வன்னியில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்விருட்சம் அமைப்பினர் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர்.

குறிப்பாக வவுனியா , முல்லைத்தீவு , மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கு மேற்ப்பட்ட குடும்பத்தினருக்கு உலர் உணவு பொதிகள் , குழந்தைகளுக்கான பால்மா, நுளம்பு வலை, பாய் போன்ற பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியுடன் இச் செயற்றிட்டம் கடந்த நான்கு நாட்களாக முன்னேடுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களை வந்து கூட பார்க்கவில்லை ஆனால் வவுனியாவிலிருந்து இயங்கும் ஓர் பொது அமைப்பான தமிழ் விருட்சத்தின் தலைவர் பாதிக்கபட்ட வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 4 =

*