;
Athirady Tamil News

சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடி!! (படங்கள்)

0

மானிப்பாய், சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்ற போது, பொலிஸாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைவிட்டுத் தப்பி ஓடியுள்ளது.

இந்தச் சம்பவம் மானிப்பாய், சுதுமலை வடக்கில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. வாள் உள்ளிட்ட இரும்பினாலான ஆயுதங்கள் அவர்களின் கையில் இருந்தன. மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகள் மறைக்கப்படிருந்தன.

வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பல், வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டுத் தப்பித்தது” வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்த வீட்டிலிருந்து புறப்பட்டு சிறிது தூரத்தில் மானிப்பாய் பொலிஸார் இருவரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

வன்முறைக் கும்பலின் மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*