;
Athirady Tamil News

அம்பாறை கல்முனையில் கார்த்திகை தீபத் திருவிழா!! (படங்கள்)

0

கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடினர்.

புதன்கிழமை(11) இதையொட்டி இரவு பெண்கள், வீடுகள் , தெருக்கள், மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

சிறுவர்கள் தீபம் ஏற்றி ஆனந்தமடைந்தனர்.

முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம் நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில் சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.அம்பாறை மாவட்டத்தில் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில் மேற்குறித்த நிகழ்வு சிறப்புற இடம்பெற்றதுடன் தரவைபிள்ளையார் பிள்ளையார் கோயில் முன்றலில் சொர்க்கப்பனையும் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + eight =

*