;
Athirady Tamil News

என் அம்மாவின் துணை மற்றொரு பெண்தான்! என்னுடையது LGBT குடும்பம் – இளவயது பிரதமரின் பகிர்வு..!!

0

என்னுடைய பெற்றோர் ஒரே பாலினத்தவர்கள் என்று பின்லாந்தின் இளம் வயது பிரதமர் சன்னா மரின் பகிர்ந்துள்ளார்.

சமீப நாட்களில் அதிகம் டிரெண்டிங்கில் இருக்கும் நபர் சன்னா மரின். 34வது வயதில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள சன்னாமரின் தனது குடும்பம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில் ” என்னுடையது ஒரு LGBT(Lesbian, gay bisexual, and transgender) குடும்பம். என் அம்மாவின் வாழ்க்கைத்துணையாக இருந்தவர் ஒரு பெண்தான். அவர்கள் இருவரும் இணைந்து என்னை வளர்த்தார்கள். எனக்கு தெரியும் என்னுடைய குடும்பம் மற்ற குடும்பங்களில் இருந்து மாறுபட்டது. ஆனால், என் வளர்ச்சியில் குடும்பத்தின் பங்கு பெரியது.

இயல்புக்கு மாறான குடும்பத்தில் வளர்ந்ததால், சிறு வயதில் என் குடும்பத்தை பற்றி நான் யாரிடமும் வெளிப்படையாக பேசியதில்லை. எனெனில், ஒரே பாலினத்தினர் சேர்ந்து வாழும் குடும்பங்கள் இன்றைக்கும் மறைக்கப்பட்ட அல்லது விலக்கப்பட்டவையாகவே சமூகத்தில் வாழ்ந்து வருகின்றன.

குடும்ப வாழ்க்கையை பற்றி வெளிப்படையாகப் பேச முடியாமல் இருந்த காலகட்டம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எங்கள் மூவரையும் யாரும் குடும்பமாகவே கருதவில்லை. வழக்கமான குடும்பங்கள் அமையப்பெற்றவர்கள் எங்களை சமமாகவும் நடத்தவில்லை.

இது குறித்து நான் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் கவலை கொள்ளவில்லை. என் குடும்பம் காரணமாக மற்றவர்கள் என்னைக் கேலி செய்வதையும் நான் அனுமதிக்கவில்லை. அந்தளவுக்கு என் சிறு வயதில் வலிமையானவளாகவும் பிடிவாதக்காரியாகவும் இருந்தேன்”என்று பகிர்ந்துள்ளார்.

இப்படி தைரியமாக வெளிப்படையாக கூறியுள்ள சன்னா மரின்யை பலரும் பாராட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − seven =

*