;
Athirady Tamil News

குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு !!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்ள அமைச்சரவை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இணைப் பேச்சாளர் இந்த வியடங்களை குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்ககலுவேவ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடு தழுவிய ரீதியில், சமூகப் பொருளாதார துறைகளில் சாதாரண தரத்தில் சித்தியடைந்த இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேர் இதற்கு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைவாக புதிய யோசனை சிலவற்றுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த நியமணங்களில் அரசியல் பாரபட்சம் இடம்பெறாது என்றும் இணை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அரசாங்கம் இதனை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பிலான திணைக்களம் அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இவர்களுக்கு சிறிது காலம் பயிற்சி வழங்கி நாடு தழுவிய ரீதியில் நிலவும் குறைபாடுகளுக்கு இணங்க போக்குவரத்து, கல்வி, விவசாயம், பெருந்தோட்டத்துறை போன்றவற்றில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கு மேலதிகமாக பயிற்சி தொழிலாளர்கள் 30 ஆயிரம் பேரை இணைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + four =

*