;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொலிஸ் அதிகாரிகள் பலர் இன்றும் சாட்சியம் !!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) பொலிஸ் அதிகாரிகள் பலர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.

அதேபோல் நேற்று (12) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்தனர்.

அதற்கமைய பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். லஹிரு பிரதீப் உதயங்க சாட்சியம் அளிக்கையில், தாக்குதல் நடத்தப்பட்டு 2 நாட்கள் கடந்த நிலையில், கொழும்பு வடக்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டார தமக்கு அழுத்தங்களை பிரயோகித்தாக தெரிவித்தார்.

அதாவது தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தாக பொலிஸ் முறைபாட்டு புத்தகத்தில் பதிவிடுமாறு அவர் தனக்கு அழுத்தம் கொடுத்தாக பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். லஹிரு பிரதீப் உதயங்க தெரிவித்துள்ளார்.

இதன் போது தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கவில்லையா என அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் அவரிடம் வினவியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டு 2 நாட்களின் பின்னர் அப்போது கொழும்பு வடக்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டார தம்மை அவரின் அலுவலகத்திற்கு அழைத்தாக கூறினார்.

அவ்வாறு அழைத்து தாக்குதல் தொடர்பான பதிவு ஒன்றை ஜம்பட்டா வீதியில் உள்ள பாதுகாப்பு காவலரண் முறைப்பாட்டு புத்தகத்தில் பதிவிடுமாறு கேட்டதாகவும் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். லஹிரு பிரதீப் உதயங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பதிவிட மறுப்பு தெரிவித்தமையால் தன்னை மோதர பொலிஸ் நிலையத்தில் இருந்து வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தாகவும் அவர் ஆணைக்குழுவில் கூறியுள்ளார்.

இதற்கும் மேலதிகமாக பொலிஸ் காஸ்ன்டபில் ஏ.எல். நளீன் பண்டார, பொலிஸ் பரிசோதகர் ஏ.எச்.எம். சிறிசேன அபேசிங்க உள்ளிட்டோரும் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தனர்.

இதேவேளை, கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எல்.எச். மஹிந்த கருணாரத்ன ஆணைக்குழுவில் இன்று (13) சாட்சியம் அளிக்கவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*