;
Athirady Tamil News

கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு!!

0

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை (14) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு 05 மற்றும் 06 பகுதிகளில் நீர்விநியோகம் குறைந்த அழுத்தத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*