;
Athirady Tamil News

எனது அடுத்த இலக்கு யாழ். நல்லை ஆதினம் – நித்தியானந்தா தெரிவிப்பு!! (வீடியோ)

0

என்னுடைய அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்தான் என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய காணொலியில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது முகநூல் பக்கத்தில் புதிய காணொலிகளை வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிட்டுள்ள புதிய காணொலியில் தெரிவித்திருப்பதாவது:

சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்தான்.

நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு வி‌ஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும்.

ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும்.

நான் எந்த அமைப்பிலும் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள்.

இவ்வாறு காணொலியில் பேசிய அவர் திடீரென ராவணனை சாடினார்.

இராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம்தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான்.

உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து இலங்கையில்தான் வைத்தான் – என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”














நித்தியானந்தாவுக்கு நாங்கள் தஞ்சம் அளிக்கவில்லை.. அவர் எங்கள் நாட்டில் இல்லை.. ஈக்வடார் மறுப்பு!! (படங்கள், வீடியோ)

நித்யானந்தா அறிவித்த புது நாடு ‘கைலாசா’ – கொடி, துறைகளும் அறிவிப்பு..! (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 1 =

*