;
Athirady Tamil News

மேற்கு வங்காளத்தில் இருதலை நாகம் – வனத்துறை அதிகாரிகளிடம் தர மறுத்த கிராம மக்கள்..!!

0

மேற்கு வங்காள மாநிலத்தின் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ளது மிட்னாபூர் நகரம். இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இரு தலைகளை உடைய நல்ல பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் இரு தலை உடைய நாகம் புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது என கூறிய பொதுமக்கள் பாம்பை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்தனர்.

இதுகுறித்து வனத்துறையின் ஊர்வனவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், ‘இது ஒரு மனிதன் இரண்டு தலைகள் அல்லது கட்டைவிரல்களைக் கொண்டிருப்பது போன்ற ஒரு உயிரியல் சார்ந்த பிரச்சினை. இதேபோல் இந்த பாம்புக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை. இத்தகைய உயிரினங்களின் ஆயுட்காலம் அவற்றை காப்பகத்தில் வைத்திருப்பதன் மூலம் அதிகரிக்கிறது. பாதுகாக்கப்பட்டால் இந்த பாம்பின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும்’ என்றார்.

இருதலை பாம்பை வனத்துறையினரிடம் கிராம மக்கள் தர மறுத்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − three =

*