;
Athirady Tamil News

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் இறந்த தினம்: 14-12-1799..!!

0

ஜார்ஜ் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஆவார். இவர் 1732-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி பிறந்தார். அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் இங்கிலாந்தை தோற்கடித்தார். 1789 முதல் 1797 வரை 8 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். 1799-ம் ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி மரணம் அடைந்தார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1819 – அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22-வது மாநிலமானது. * 1884 – இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. * 1899 – யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது. * 1900 – மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார். * 1911 – ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.

* 1918 – பின்லாந்தின் மன்னனாக ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தேர்வு செய்யப்பட்டான். * 1939 – நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. * 1941 – உக்ரைனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜெர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. * 1946 – ஐநாவின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவாகியது.

* 1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும். * 1972 – அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார். * 2003 – சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். * 2003 – பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார். * 2004 – தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + seven =

*