;
Athirady Tamil News

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது !!

0

மொரகாஹென பகுதியில் 3 கோடிக்கும் அதிக பெறுமதியான ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மறைத்து வைத்திருந்த 3 கிலோ ஹெரோயின் போதைப் பொருளையும், இவர்கள் பயணித்த மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + twenty =

*