;
Athirady Tamil News

ஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும் – தவராசா!! (படங்கள்)

0

ஆலயங்கள் மக்களுக்கு ஆன்மீகத்தை போதிப்பது மட்டுமல்லாது ஆன்மீக கல்வியோடு எமது மக்களின் வருமானத்தை பெருக்கக்கூடியசமூகத்தை வளப்படுத்தக்கூடிய செயல்களிலும் இறங்க வேண்டும். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 15 ம் கிராமம் ஸ்ரீ முருகன் தேவஸ்தானம்2020 ம் ஆண்டிற்கான புதிய திருக்கணித பஞ்சாங்கநாட்காட்டியை வெளியிட்டு வைக்கப்பட்டது.ஸ்ரீ முருகன் தேவஸ்தானமுன்றலில் வெள்ளிக்கிழமை(13)மாலை 7 மணியளவில் ஆலயத் தலைவர் கண்ணப்பன் விஜயகுமாரன் தலைமையில் ஆலய பிரதம குரு தி.தேவகுமார்சிவாச்சாரியார் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வெளியிட்டு வைக்கப்பட்டமுதல் நாட்காட்டியை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபைதவிசாளருமாகிய தவராசா கலையரசன் ஆலய பிரதம குருவிடம் இருந்து பெற்று கொண்டார்.

அங்கு உரையாற்றிய தவிசாளர்ஆலயங்கள் மக்களுக்குஆன்மீகத்தை போதிப்பது மட்டுமல்லாது ஆன்மீக கல்வியோடு எமது மக்களின் வருமானத்தை பெருக்கக்கூடியசமூகத்தை வளப்படுத்தக்கூடிய செயல்களிலும் இறங்க வேண்டும்.கிராமப்புறங்களில்இவ்வாறான நிகழ்வுகள் மக்கள் மனதில் உள்ள ஐயப்பாடுகளை நிவர்த்தி செய்யும் இதன் ஒரு வளமிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் இப் பிரதேச கிராமங்களில் 15ம் கிராமம் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாகவும் நகர்புறங்களே வியக்கும் வண்ணம் முன்னேற்றம் கண்டிருப்பது என்னையும் இக் மண்ணில் பிறந்தவன் என்பதில் பெருமைகொள்ளச்செய்கிறது என குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*