;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான 23 வயது யுவதி – இருவர் படுகாயம்!!

0

நாவுல, பிலிஹுடுகொல்ல பிரதேசத்தில் நேற்று (13) இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த யுவதி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த மற்றைய இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞர்கள் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − three =

*