;
Athirady Tamil News

வவுனியா மாணவிக்கு வீட்டுத்திட்டம்!! (படங்கள்)

0

குருதியை பெற்றுக் கொள்ளும் தானியங்கி ரோபோ இயந்திரத்தை கண்டுபிடித்த வவுனியா மாணவிக்கு வீட்டுத்திட்டம்: ஜனாதிபதியின் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் வாக்குறுதி

நீரிழிவு நோயாளர்களின் சர்க்கரையின் அளவையும், குருதியின் வகையையும் பரிசோதிப்பதற்கு தேவையான குருதியைப் பெற்றுக் கொள்ளும் தானியங்கி ரோபோ இயந்திரத்தை கண்டு பிடித்த வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி றோகிதா புஸ்பதேவன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு சென்ற வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மபால செனவிரட்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், ஜனாதிபதியின் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கான இணைப்பாளருமான கேணல் ரட்ணபிரிய பந்து, வெலிஓயா மங்களராமய விகாரதிபதி கியூலேகெதர மங்கல தேரர், இந்து மதகுரு ரட்ணம் உள்ளிட்ட குழுவினர் பாடசாலை அதிபர் பி.கமலேஸ்வரி, சாதனை மாணவி றோகிதா புஸ்பதேவன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து கௌரவிப்பு வழங்கினர்.

இதன்போது குறித்த மாணவியின் குடும்பநிலை தொடர்பாக கேட்டறிந்த அவர்கள் சாதனை மாணவி மற்றும் அவரது சசோதரி ஆகியோரின் கல்வி தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்த அவர்கள், மாணவி வாடகை வீட்டில் குடியிருப்பதானால் மாணவிக்கு வவுனியாவில் காணி வழங்கி வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன வாக்குறுயளித்ததுடன், மாணவியின் சாதனை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 9 =

*