;
Athirady Tamil News

ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் அழகான வன்னியை உருவாக்குவோம்: தர்மபால!!

0

ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் அழகான வன்னியை உருவாக்குவோம்: தர்மபால செனவிரட்ன

ஜனாதிபதியின் அழகிய இலங்கை என்னும் வேலைத்திட்டத்தின் அழகிய வன்னியை உருவாக்குவோம் என வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளருமான தர்மபால செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அரசாங்கத்தின் காலப்பகுதியில் வன்னியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜனாதிபதி அவர்களின் சிந்தனையில் உதித்த அழகிய இலங்கை என்னும் வேலைத்திட்டமானது அழகான வடக்கு என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது. சுவர்களில் பொருத்தமான படங்களை வரைந்து, தேவையற்ற படங்களை பிள்ளைகள் பார்க்க விடாமல் அழிப்போம். எல்லா இடங்களிலும் வடிவாக படங்களை வரைந்து கொள்ளவுள்ளோம். ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் வன்னியை துப்பரவு செய்து அழகிய வன்னியை உருவாக்குவோம் எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*