;
Athirady Tamil News

சுவிஸில் பிள்ளைக்காக சொந்த தாயாரை கொடூரமாக கொன்ற மகன்..!!!

0

சுவிட்சர்லாந்தில் காதலியுடன் இணைந்து இளைஞர் ஒருவர் சொந்த தாயாரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொடூர கொலை அரங்கேறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

33 வயதான நபர் தமது மகனை தம்மிடம் இருந்து தாயாரும் வளர்ப்பு தந்தையும் பிரிக்க பார்க்கிறார்கள் என குற்றஞ்சாட்டிவந்த நிலையில், முன்னாள் காதலியுடன் இணைந்து கடந்த 2017 அக்டோபர் 15 ஆம் திகதி சொந்த தாயாரை அவர் கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்மணியின் உடல் முழுவதும் 52 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வளர்ப்பு தந்தையை 15 முறை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில்,குறித்த 33 வயது நபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி, தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையான பின்னர், அவருக்கு உளவியல் சிகிச்சை வழங்கவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை சம்பவத்தின் போது உடன் இருந்த இவரது காதலிக்கும் அரசு தரப்பு 18 ஆண்டுகள் சிறை தண்டனை கோரியுள்ளது.

ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் விசாரணையில் சிக்காத நிலையில், கொலைக்கு திட்டமிட்டது உடந்தையாக செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*