;
Athirady Tamil News

இயந்திரத்திற்குள் குழந்தையின் முகம்: அதிர்ச்சியில் உறைந்த இணையதளவாசிகள்..!!!

0

ரஷ்ய தந்தை ஒருவர் இணையத்தில் வெளியிட்ட புகைப்படமானது, பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த தந்தை ஒருவர் வேகமாக சுழன்றுகொண்டிருந்த சலவை இயந்திரத்திற்குள், தனது குழந்தை சிக்கிக்கொண்டிருப்பதை போன்ற புகைப்படத்தை சமீபத்தில் தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலில் அதனை பார்த்து தான் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாகவும், அதன்பின்னரே ஆடையில் பொறிக்கப்பட்டிருந்த தனது குழந்தையின் படம் என்பதை உணர்ந்ததாகவும் கூறியிருந்தார்

இதனை பார்த்த பெரும்பாலான இணையதளவாசிகள், பார்த்த உடனே தங்களுக்கு நெஞ்சுவலி, மனஅழுத்தம் வந்துவிட்டதாக கூறினர். இதுபோன்ற படங்களை பதிவிடும் போது எச்சரிக்கை என குறிப்பிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் அவர் தன்னுடைய இடுகையின் வார்த்தைகளை மாற்றி, இதுபோன்ற படங்களை பதிவிடும்போது எச்சரிக்கைக்கு என குறிப்பிடுமாறு மற்றவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த இடுகை தற்போது 100,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 4 =

*