;
Athirady Tamil News

லிந்துலை ஹென்போல்ட் தோட்ட தொழிலாளர்கள் மீது குளவிக் கொட்டு!! (படங்கள்)

0

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 14 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் 15.12.2019 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 6 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆண்களும், 7 பெண்களும், ஒரு சிறுமியும், அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 4 =

*