நாட்டுக்கு அடுத்த வருடம் பொருளாதார வெற்றி கிடைக்கும்!!

நாட்டுக்கு அடுத்த வருடம் பொருளாதார வெற்றி கிடைக்கும் என நம்புவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு தனியார் துறைகளிலிருந்து மகத்தான பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டை அடையும் போது ஆறு தசம் ஐந்து சதவீத மொத்த உற்பத்தி அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தள்ளார்.
சுற்றுலா, கடற்றொழில், விவசாயம் ஆகிய துறைகளில் அதிகளவான வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடத்தில் ஆறு தசம் ஐந்து சதவீத பொருளாதார அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகவதாக நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.