;
Athirady Tamil News

யாழ். நகரில் இளைஞர்கள் ஒன்று கூடி நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் நகரில் இளைஞர்கள் ஒன்று கூடி நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.

இளைஞர்களின் குறித்த வேலைத்திட்டத்தினை யாழ் மாவட்ட அபிவித்தி குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமனாதன் இன்றைய தினம் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு இளைஞர்களின் தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை சமூக வலைத்தளங்களினூடாக இளைஞர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இத் தகவல்கள் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி தாமாகவே இளைஞர்கள் முன்வந்து அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

தேர்தல் காலங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், விளம்பர நோக்கத்திற்காக ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகளையும் அகற்றிவிட்டு, அவ்விடத்தில் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து நகரை அழகுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

அழகிய வண்ணமயமான ஓவியங்களை வரைந்து யாழ் நகரை சுத்தம் செய்யும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கும் இந்த இளைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

படங்கள் ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 12 =

*