;
Athirady Tamil News

தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து ஆராயுமாறு ரணில் அறிவுறுத்தல்!!

0

ஐக்கிய தேசியக் கட்சின் யாப்பில் கட்சி தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான ஆலோசனைகளை முன்வைக்குமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் சட்டத்தரணிகளை அறிவுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட சட்டத்தரணிகளுடன் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து அறிவித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சில் தலைவருக்கு உரித்தான அதிகாரங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது தொடர்பில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

ஆனப்படியால் கட்சியில் குறித்த மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாட ஆவணம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கட்சியின் சட்டத்தரணிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள கட்சி யாப்புக்கு அமைய கட்சியின் தலைவர் ஆறு வருட பதவிகாலத்திற்காக தெரிவுச் செய்யப்படுவார்.

ஆனால் குறித்த தலைமை பதவியில் இருக்கும் ஒருவர் தனது சுயவிருப்பில் விலகினாலே தவிர அவரை பதவி விலக்குவதற்கான அதிகாரம் இல்லை என்பது குறித்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 7 =

*