;
Athirady Tamil News

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!!

0

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஜனவரி இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகிய நிலைகளுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறு பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியதும் முதலில் சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகிய நிலையகளுக்கு உறுப்பினர்கள் தெரிவுச்செய்யப்பட வேண்டும்.

ஆகவே மேற்குறித்த பதவிகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வது சம்பந்தமாக எதிர்வரும் கலந்துiயாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*