;
Athirady Tamil News

அப்பா சிந்திய வியர்வையே எனது சாதனைக்கு காரணம்!!

0

அப்பா விவசாயம் செய்து சிந்திய வியர்வையே எனது சாதனைக்கு காரணம்: வவுனியாவில் வர்த்தக பிரிவில் முதல் இடம்பெற்ற பிரதீஸ்

எனது தந்தை விவசாயம் மேற்கொண்டு கஸ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார். அவர் சிந்திய வியர்வையே எனது சாதனைக்கு காரணம் என வவுனியா மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாவது இடத்தினை பெற்ற புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் தங்கராசா பிரதீஸ் தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா வடக்கு வலயத்திற்குரிய புதுக்குளம் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த தங்கராசா பிரதீஸ் 3ஏ சித்திகளைப் பெற்று வர்த்தகப் பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த மாணவன் மேலும் தெரிவிக்கையில்,

வர்த்தகப் பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை என்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நான் இந்த நிலையை அடைய கஸ்ரப்பட்டு என்னை படிக்க வைத்த அப்பா, அம்மாவுக்கு நன்றிகள். எனது அதிபர், ஆசிரியர்கள் சிறப்பாக கற்பித்து வழிநடத்தினார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

தினசரி 5 கிலோமீற்றர் பேருந்தில் பயணித்து தான் எனது புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு வருகை தந்து கல்வி கற்றேன். தினமும் பாடசாலையில் கற்பிக்கும் பாடங்களை வீட்டிற்கு சென்று மீளப் படிப்பேன். அத்துடன் பரீட்சை வினாத்தாள்களையும் செய்து பார்ப்பது வழமை. எனது தந்தை விவசாயம் மேற்கொண்டு என்னை கற்பித்தார். மிகுந்த கஸ்ரத்திற்கு மத்தியில் அப்பா வியர்வை சிந்தி விவசாயம் செய்தார். அதனால் நான் சாதனை படைத்துள்ளேன். அப்பா கஸ்ரப்பட்டதன் பயனை அடைந்துள்ளேன்.

சட்டத்தரணி ஆகுவதே எனது எதிர்கால இலட்சியமாக கொண்டு இவ் பரீட்சை பெறுபேற்றினை பெற்றுள்ளேன். கஷ்டம் என்பது பெரிய ஒரு விடயமே இல்லை. எமது மனநிலை படிப்பில் மாத்திரம் இருந்தால் சிறந்த பேறுபேற்றை அடைய முடியும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*