;
Athirady Tamil News

வவுனியாவில் 100 தமிழ் மாணவர்களுக்கு உதவித்திட்டம்!! (படங்கள்)

0

வவுனியாவில் பெருபான்மை இனந்தை சேர்ந்தவரினால் 100 தமிழ் மாணவர்களுக்கு உதவித்திட்டம்

வறுமைக்கோட்டிற்குட்பட்ட 100 தமிழ் மாணவர்களுக்கு வவுனியா குடியிருப்பு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (28.12.2019) காலை 9.30 மணியளவில் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கம்பகா மாவட்டத்தினை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சாந்த நீல் அவர்கள் வன்னி மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 15,000 மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக இன்றையதினம் வவுனியாவில் 100 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி மக்கள் காப்பகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சி.சுஜிகரன் , வன்னி தேர்தல் மாவட்டத்தின் இணைப்பாளர் மஞ்சுல , பீ(B)ட்றா வளாகம் இணை பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் கலாநிதி வ.விஜிதரன் , வவுனியா மாவட்ட முதியோர் சமாசத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + nineteen =

*