;
Athirady Tamil News

பலரது கவனத்தை ஈர்த்த கிளிநொச்சி இளைஞர்கள்!! (படங்கள்)

0

நாடு பூராகவும் பல மாவட்டங்களில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகின்றது அந்த வகையில் கடந்த வாரம் கிளிநொச்சி சுயாதீன இளைஞர்களால் வர்ணமயமாகும் கிளிநொச்சி எனும் தொனிப் பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வர்ணம் பூசும் பணி அரசியல் கட்சிகள் ,வர்த்தகர்கள் ,அமைப்புக்கள் ,தனிநபர்கள் எனப் பலரின் ஆதரவோடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள் தமக்கு கிடைக்கின்ற நேரங்களைப் பயன்படுத்தி பேருந்து தரிப்பிடங்கள் ,மதில்கள் ,கட்டடங்கள் ஆகியவற்றில் ஓவியங்களை வரைந்து ஓவியங்களால் அழகாக்கி வருகின்றனர்.

இவ் ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும் ஆதரவினைவும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து குறித்த சுயாதின இளைஞர் குழுவிடம் வினவிய பொழுது எமக்கு கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி இவ் வேலைத்திட்டத்தை செய்து வருகின்றோம் பலர் உதவிகளை செய்து வருகினார்கள் முதற்கட்டமாக நகர்பகுதியில் உள்ள பேருந்து நிலையங்களும் சில வீதிக்கு அருகில் உள்ள கட்டடங்கள் மற்றும் மதில்கள் அடையாள படுத்தப்பட்டுள்ளது அவற்றுக்கான அனுமதிகளையும் சட்டரீதியாக எடுத்துள்ளோம் அவற்றை முடித்த பின்னர் அடுத்த பகுதிகளை நோக்கி நகரவுள்ளோம் எமது திட்டத்திற்கு அனைத்து அரசியல் தரப்பும் எமது வர்த்தகர்கள் அமைப்புக்கள் தனிநபர்கள் என பலரும் உதவுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − five =

*