;
Athirady Tamil News

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!!

0

தனமல்வில சமாதிகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்த நபரின் சடலத்தை இன்று காலை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயதான குமாரகம என்ற பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சமாதிகம என்ற இடத்தில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் தலைப்பகுதியிலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்த தனமல்வில பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என கூறினர்.

தனமல்வில தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*